புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பழங்குடியின மக்கள் கௌரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன. புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா, “பிரதமர் மோடியை குஷிப்படுத்துவதற்காக `கெளரவம்’ என்ற போர்வையில், பழங்குடியின மக்களை நடைபாதையில் அமரவைத்து இழிவுபடுத்திய புதுச்சேரி அரசின் மனித உரிமை மீறலை, தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. பழங்குடிகளே இந்திய நாட்டின் பூர்வகுடிகள். அதனால்தான் இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்ட காலத்திலேயே, அவர்களுக்கான உரிமைகளும் பாதுகாப்பும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 75-வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டங்களுக்குப் பிறகும், அந்த மக்களைச் சமத்துவம் பெற்றவர்களாக உருவாக்காததற்கு இந்த அரசுகள் வெட்கப்பட வேண்டும்.

விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்

விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்

பா.ஜ.க-வின் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில், அந்த மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும் கொடுமைகளும் கணக்கில் அடங்காதவை. ஆண்டாண்டுக்காலமாக அவர்கள் வாழ்ந்துவந்த மலைகளும் காடுகளும், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதற்காக ஏலம்விடப்பட்டிருக்கின்றன. அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தீவிரவாதிகள் என்ற போர்வையில் சுட்டு வீழ்த்தப்பட்டும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் வருகின்றனர். மணிப்பூர் பழங்குடி மக்கள் கடந்த நான்கு மாதங்களாக அனுபவித்துவரும் கொடுமைகளை நாடும் உலகமும் கண்டித்தும், தனது தேர்தல் லாபத்துக்காக அந்த மக்களை எட்டிக்கூடப் பார்க்க முடியாதவர் நமது பிரதமர் மோடி. அதன் எதிரொலிதான் பிரதமரோடு தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார் மிசோராம் முதல்வர். அதையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி, `பழங்குடியினர் கௌரவ தினவிழா’ என்ற பெயரில், இந்த மக்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *