குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்தவகையில் உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் CEO-வுமான எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை “பிளாக் ஸ்வான்’, ‘பை’,போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி ( Darren Aronofsky) இயக்க உள்ளார். ஏ 24 என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்
Pool

சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல பிரச்னைகளை எதிர்கொண்ட எலான் மஸ்க் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்பது இடம்பெற்றிருந்தது. தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் அவை ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றில் எந்த ஹாலிவுட் பிரபலம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *