
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,415 கன அடியாக சரிவு.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 59.73 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,737 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,415கன அடியாகச் சரிந்துள்ளது.
இதையும் படிக்க | குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 24.48 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…