பேரனின் காது குத்து நிகழ்ச்சியில் குடும்பத்தினர் உடன் கலந்து கொண்ட ரஜினி

18 செப், 2023 – 11:09 IST

எழுத்தின் அளவு:


Rajini-attended-his-grandson's-ear-piercing-ceremony-with-his-family

ஜெயிலர் படத்தை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் விரைவில் நடிக்க உள்ள ரஜினி, அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்க போகிறார். இப்படியான நிலையில் நேற்று கோவையை அடுத்த சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா – விசாகன் தம்பதியரின் மகனுக்கு காதணி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உடன் கலந்து கொண்டார். இதற்காக மருமகன் விசாகனின் குலதெய்வம் கோயிலான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற ரஜினி, குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு கோவையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ரஜினி, அவரது மனைவி லதா, அண்ணன் சத்யநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மீடியாக்களை சந்தித்தபோது, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நீங்கள் சிறைக்கு சென்று சந்திக்கப் போவதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி விடுத்த போது, அங்கு போவதாக இருந்தது. ஆனால் இங்கே பேமிலி பங்க்ஷன் இருந்ததால் போக முடியவில்லை என்று கூறினார் ரஜினி.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *