மண்ணாங்கட்டி படத்தின் அப்டேட்: நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மண்ணாங்கட்டி படம்: 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டேர் நயன்தாரா. இந்த திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு “மண்ணாங்கட்டி since 1960” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு நடிக்கயுள்ளார். இவர்களுடன் தேவதர்ஷினி, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தியதாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். 

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் நிலவரம்: உலகளவில் இத்தனை கோடி கலெக்ஷனா

ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்:
இந்நிலையில் தற்போது “மண்ணாங்கட்டி since 1960” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கூறிய விரைவில் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்தமாக யூடியூப் சானல் ஒன்றைத் தொடங்கினார் டியூடு விக்கி. இந்த சானலுக்கு டியூடு விக்கி என்று பெயர் வைத்தார். இந்த சானலில் இவர் வெளியிட்ட ட்ரோல் வீடியோக்கள் பல ,சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதனால் தற்போது நயன்தாராவை வைத்து இவர் இயக்கவிஇருக்கும் “மண்ணாங்கட்டி since 1960” படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாஸ் ஹிட் அடித்த ஜவான்: 
முன்னதாக ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் வெளியாகி இன்றுடன் பத்தாவது நாள் நிறைவடையும் நிலையில் இப்படம் ரூ.797.50 கோடியை கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.800 கோடியை நெருங்க உள்ளது ஜவான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த டியூடு விக்கி:
விக்கி லீக்ஸ், வெல்லும் சொல், சாட்டை போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் பரவலாக அறியப்பட்டவர் விக்கி. இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் கன்ஸல்டன்சி சர்வீஸ் என்கிற இணையத் தொடரை இயக்கிய  விக்கி சமூக வலைதளத்தில் அதிகம் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவராக மாறினார். தமிழகத்தின் பிரபலமான யூடியூப் சானலான ப்ளாக் ஷீப்பில் இணைந்தார் விக்கி. இந்த சானலில் வெளிவந்த பல்வேறு ட்ரெண்டான நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் விக்கி. கல்லூரி சாலை, ஆண்டி இண்டியன்ஸ் ஜாக்கிரதை ஆகிய இவர் கதை எழுதிய நிகழ்ச்சிகள் அதிகம் பரவலாக பார்க்கப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்தமாக யூடியூப் சானல் ஒன்றைத் தொடங்கினார் விக்கி. இந்த சானலுக்கு டியூடு விக்கி என்று பெயர் வைத்தார். இந்த சானலில் இவர் வெளியிட்ட ட்ரோல் வீடியோக்கள் பல ,சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதனால் தற்போது நயன்தாராவை வைத்து இவர் இயக்கவிஇருக்கும் “மண்ணாங்கட்டி since 1960” படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை நயன்தாரா யூடியூபர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் படிக்க | லோகேஷ் – ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது? ஹாட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *