இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) சட்டப் படிப்பையும் படித்து முடித்தார். சட்டப் படிப்புக்குப் பிறகு டேவிஸ் போல்க், வார்டுவெல் என்ற சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர், 2014-ம் ஆண்டு `Roivant Sciences” என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக நிதியைத் திரட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின்கீழ் பல துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

குடும்பத்துடன் விவேக் ராமசாமி

குடும்பத்துடன் விவேக் ராமசாமி

2015-ம் ஆண்டு விவேக் ராமசாமியின் மருந்து மேம்பாட்டுப் பங்களிப்பு பற்றி புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `Chapter Medicare’ என்ற இணை மருத்துவ நிறுவனத்தையும் தொடங்கினார். அமெரிக்காவின் மிகப்பெரிய பயோடெக் தொழிலதிபர் எனும் நிலைக்கு உயர்ந்தார். 2021-ம் ஆண்டுவரை Roivant Sciences நிறுவனத்தின் தலைமை நிர்வாக (CEO) அதிகாரியாகப் பணியாற்றியவர், தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது Strive Asset Management நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், நிர்வாகத் தலைவராகவும் பணியில் இருக்கிறார். அமெரிக்க மருத்துவத்துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம் வரும் விவேக் ராமசாமியின் மொத்தச் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 4,140 கோடி ரூபாய்க்கும் அதிகம். தொழிலதிபராக இருந்தபடியே Woke, Nation of victims ஆகிய இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார் விவேக் ராமசாமி.

‘பழைமைவாதி…’ என்று தன்னைத் தானே விவரிக்கும் விவேக் ராமசாமிக்கு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அரசியல் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்ற டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி, விவேக் ராமசாமிக்கு அரசியல் உத்வேகத்தை அளித்தது. மேலும், அமெரிக்க தேசியவாதத்தின் மீது தீவிர நம்பிக்கையையும் விவேக்கின் மனதில் விதைத்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராகக் களம் இறங்கும் விவேக் ராமசாமி இந்த ஆட்டத்தில் ஆடும் ஆட்டம் எப்படி அமையப்போகிறது என அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *