லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்திற்கு பிறகு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தலைவர் 171:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அண்மையில் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குகிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

லோகேஷ் சம்பவம் லோடிங்க்:
கோலிவுட் சினிமாவில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் நல்ல இயக்குநர் என்ற இடத்தை பிடித்திருப்பவர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்து கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கியிருந்த படம், மாஸ்டர். இப்படம் “எதிர்பார்த்த அளவிற்கு இல்லை..” என்ற விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து அவர் இயக்கியிருந்த ‘விக்ரம்’ படத்திலும் தனக்கு பிடித்த நடிகரான கமலை வைத்து சம்பவம் செய்தார். இதையடுத்து பான் இந்தியா அளவிற்கு லோகேஷ் கனகராஜ்ஜின் தரம் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில், இவர் தற்போது ரஜினிகாந்தை இன்னொரு சம்பவம் செய்ய உள்ளளார். இதற்காக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | அப்போ விவேக்..இப்போ மாரிமுத்து! வரிசையாக உயிரிழக்கும் இந்தியன் 2 பட நடிகர்கள்..!

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது…?
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ,  நவம்பரில் தன்னுடைய வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாராம். சிகிச்சை முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் படத்தில் அதாவது தலைவர் 171 படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சில பான் இந்திய நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்தத்திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது., லோகேஷ் கனகராஜூடன் இணையும் திரைப்படம் இன்னும் லேட்டாகும். தா.செ. ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்தத்திரைப்படத்தில் நடிப்பேன். படம் எப்படி வரும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிச்சயமாக திரைப்படம் நன்றாக வரும் என்று கூறியுள்ளார். இது ரஜினியின் ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படம் 375.40 கோடி கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது, தமிழகம் மட்டுமின்றி உலகளவில் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல்-டாடா to பதான்..எந்த சேனலில் என்னென்ன புது படங்கள் பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *