அமெரிக்காவின், சான் பிரான்ஸிஸ்கோவிலிருக்கும் Reem’s California என்ற உணவகத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை சான் பிரான்ஸிஸ்கோ காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள Reem’s California மற்றும் அதன் கிளை உணவகங்கள், பேக்கரிகளில் ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நபர்களுக்குச் சேவை செய்யக் கூடாது என்று ஒரு புதிய கொள்கையை Reem’s California உணவகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இது குறித்து சான் பிரான்ஸிஸ்கோ காவல்துறை அதிகாரிகள் சங்கம், ஆகஸ்ட் 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள Reem’s California மற்றும் அதன் கிளை உணவகங்கள், பேக்கரிகளில் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ரீம்ஸ் கலிஃபோர்னியா

கடந்த வார இறுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் காவல்துறை சீருடையுடன், துப்பாக்கியும் வைத்திருந்த காரணத்தால், அவர் உணவகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்தக் கொள்கை அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் தொடரலாம். எங்கள் அதிகாரிகளுக்குச் சேவை செய்யவோ, அல்லது Reem’s California-வுடன் வியாபாரம் செய்யவோ நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம் ஏன் இந்த பாரபட்சமான கொள்கை என்பது மட்டும்தான்…” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த,Reem’s California உணவகம், “எங்கள் சமூகப் பாதுகாப்பை உயர்த்துவதில் Reems ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறது. எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்புச் சூழலை வளர்ப்பதும் இதில் அடங்கும். தற்போது அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை – குறிப்பாக நிற வெறுப்பு மக்களை அதிகம் பாதித்திருக்கிறது.

துப்பாக்கி

எங்கள் உணவகத்தில் துப்பாக்கிகளைத் தடைசெய்யும் கடுமையான கொள்கையைப் பராமரிப்பதன் மூலம் எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்வதாக நம்புகிறோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதன் தாக்கம் எங்களுக்கு ஓர் அனுபவமாகவே இருக்கிறது. தற்போதைய சூழல் காரணமாக பயம் அதிகமாகவே இருக்கிறது” என பதிலளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *