ஆபாச படங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு படகு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதிலிருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் நன்டூகெட் என்ற குட்டி தீவு உள்ளது. இங்கு அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர். கடந்த செவ்வாயன்று காலை நடைபெற்ற ஆய்வின்போது பெண் ஒருவர் அங்கிருந்த சொகுசு படகில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அதிகாரிகள் அந்த படகில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சொகுசு படகுக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், வார இறுதி பார்ட்டிக்கு பின்னர் ஆபாச படங்கள் இங்கு எடுக்கப்படுவதாகவும் அந்த பெண் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சொகுசு படகில் இருந்து 3 கிராம் Cocaine, 14 கிராம் Ketamine , துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
ஆபாச காட்சிகளை படமாக்குவதற்காக சொகுசு படுக்கை அறையும் படகுக்குள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் இந்த படகின் உரிமையாளர் ஸ்காட் புர்கே என்பவர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது போதைப் பொருள், ஆயுதம் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே நீதிமன்றத்தில் தன் மீதான புகார்களை புர்கே மறுத்துள்ளார். 69 வயதாகும் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், எனவே தன்னை சிறையில் அடைத்தால் தனது நிலைமை மேலும் விபரீதம் அடையும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் மீது ஏற்கனவே சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தொடர் விசாரணையில் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.