ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 4  விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகம்மது சிராஜ் ஏற்படுத்தியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதேபோன்று அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்று இலங்கை அணியின் ஜாம்பவான் சமிந்தா வாஸ் ஏற்படுத்திய சாதனையை சிராஜ் சமன் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இந்தியா மிக எளிதாக வென்று 8 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்திலும், பூஜியத்திலும் வெளியேறினர். தொடக்க விக்கெட்டை பும்ரா கைப்பற்ற அடுத்த 6 விக்கெட்டுகளை முகமது சிராஜ் அள்ளினார். கடைசி 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார். 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 50 ரன் மட்டுமே எடுத்தது,

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது. மொத்தம் இந்த இறுதிப் போட்டி 21.3 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. மழை வரும் முன்னரே இந்திய அணி ஆட்டத்தை முடித்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாக கமென்ட் செய்துள்ளனர்.

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ் சில முக்கிய சாதனைகளை ஒருநாள் போட்டியில் ஏற்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு-

  • ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சிராஜ் ஏற்படுத்தியுள்ளார்.
  • 2003 இல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை சிராஜ் சமன் செய்துள்ளார்.
  • ஆசிய கோப்பை வரலாற்றில் 2 ஆவது சிறந்த பந்து வீச்சாக சிராஜின் பவுலிங் அமைந்தது.
  • 2002- ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சிராஜ் ஏற்படுத்தியுள்ளார்.
  • தனது 29 ஆவது ஒருநாள் போட்டியில் 50 ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

பந்துகளின் அடிப்படையில் இலங்கையின் அஜந்தா மெண்டிசுக்கு (847 பந்துகள்) அடுத்தபடியாக சிராஜ் 1002 பந்துகளில் 50 ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *