ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 சுற்றின், கடைசி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு முன்பக்க தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க – ‘சரியான நேரத்தில் இலங்கை அணி எழுச்சி பெற்றுள்ளது’ – கேப்டன தசுன் ஷனகா பேட்டி

இந்தத் தொடரில் அக்சர் படேல் 2 போட்டிகளில் விளையாடி 68 ரன்களை எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக நேற்று நடந்த போட்டியின் போது 42 ரன்களை அவர் எடுத்தார். அக்சர் படேலுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தர் இன்று மாலை கொழும்புவுக்கு வந்துவிட்டதாகவும், அவர் அணியில் இணைந்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க – Asia Cup Final : ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா?

இந்திய அணி வீரர்கள் விபரம் – ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *