ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஜித் பிறந்தநாளன்று லைகாவிடமிருந்து அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். அஜித்தின் ‘துணிவு’ வெளியாகி சில மாதங்களே ஆகின்றன. ‘ஏகே 62’ விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவித்தனர். ஆனால், அதன் பின் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. விக்கேஷ் சிவன் விலகினார். சமீபத்தில் கூட, ”நான் சொன்ன கதை அஜித் சாருக்கு பிடித்துவிட்டது. ஆனால், படத் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இரண்டாம் பகுதியில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். ஆனால அதில் எனக்கு விருப்பமில்லாமல் விலகினேன். அஜித் சார் பக்கம் எந்த பிரச்னையும் இல்லை எனக்குக் கிடைச்ச வாய்ப்பு இப்போ மகிழ் திருமேனி மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி.” என விக்னேஷ் சிவன் மனம் திறந்திருந்தார்.

அஜித்துடன் விக்னேஷ்சிவன்

அஜித்துடன் விக்னேஷ்சிவன்

இந்நிலையில் மகிழ்திருமேனி படம் குறித்த அறிவிப்பு எப்போது வருமென விசாரித்தேன்.

”மகிழ் ‘கலகத்தலைவன்’ முடித்த கையோடு, மீண்டும் உதயநிதிக்கு படம் இயக்கும் ஆசையில் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றதாகவும், அவர்கள்தான் ‘மாமன்னன்’ படத்தோடு உதய் சார் நடிப்பில் இருந்து விலகுகிறார் என்றும் லைகாவில் சொல்லிவிடுகிறோம் என மகிழைப் பரிந்துரை செய்திருக்கின்றனர். அந்த சமயத்தில் தான் விக்னேஷ் சிவன் விலகலானது. லைகாவும் மகிழிடம் அஜித்திற்கான கதை இருக்கிறதா எனக் கேட்கவும், ‘ஒன்லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் மகிழ். அவரது முந்தைய படங்களும், த்ரில்லர் ஜானரும் தயாரிப்பு நிறுவனத்தை கவர்ந்துவிட்டதால், மகிழிடம் கதையைத் தயார் செய்யச் சொன்னார்கள். அஜித்திடமும் விஷயத்தை சொல்லவும், ‘உங்களுக்கு திருப்தியான பிறகு நான் கதை கேட்டுக் கொள்கிறேன். உங்க திருப்தி தான் முக்கியம்’ என பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

மகிழ்திருமேனி

மகிழ்திருமேனி

இதனால் மகிழுக்கு விருகம்பாக்கத்தில் அலுவலகம் அமைத்துக் கொடுத்து கதையை தயார் செய்யச் சொல்லியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. அனிருத் இசையமைப்பதும் உறுதியானது.

விக்னேஷ் சிவன் விவகாரத்தில் அவசரப்பட்டு அறிவித்து, பின்வாங்க நேர்ந்ததால் அப்படி ஒரு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மகிழிடம் இருந்து முழுக்கதையை கேட்டபிறகு, திருப்தியான பிறகு, கையில் பவுண்டட் ஸ்கிரிப்ட் வந்த பிறகு, புராஜெக்ட்டை அறிவித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு லைகா வந்ததாகச் சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் முழுக்கதையும் தயாராகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, அஜித்தின் பிறந்த நாளன்று ‘ஏகே 62’க்கான அப்டேட் வெளியாகலாம்.

இது எல்லாவற்றையும் விட, இன்னொரு முக்கியமான ஒரு தகவல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதன்முறையாக அஜித் நடிப்பில் சிவா இயக்கும் ‘ஏகே 63’க்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதாகச் சொல்கிறார்கள். ‘ஏகே 62’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் உலக மோட்டார் சைக்கிள் பயணத்தை அஜித் மேற்கொள்வார். அந்த பரஸ்பர மரியாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சிவாவின் படத்திற்கு வருவார் என்கிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *