இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பிரபல நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து” என தெரிவித்துள்ளார்.