மதுரை: மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிரியார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ராஜபாளையம் பகுதியில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜோசப்ராஜா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் மன நலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தர். இதுகுறித்து ராஜபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோசப் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜோசப்ராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி சூசம்மா பேபி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.

கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிகுமார் வாதிடுகையில், மனுதாரின் கணவர் பணியாற்றிய ஆலய வளாகத்திலேயே சிறு மிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் குற்றவாளி என முத்திரை குத்தப் பட்டுள்ளார். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

விசாரணை முடிவில் நீதி பதிகள், சாதாரண மனிதனைக் காட்டிலும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட ஒருவர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது நீதித்துறையை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளது. பாதுகாக்க வேண்டியவரே கொள்ளையனாக மாறி யுள்ளார். அவர் மீதான வழக் கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *