Ponniyin Selvan Part 2 Update: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் ஒன்றாகும். திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்திற்கு தற்போது வரை பெரிய பிரமோஷன்கள் இல்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது

இருப்பினும், அமெரிக்காவில் இப்படத்திற்கான முன்பதிவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அங்கு 25 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கும் அதிக மதிப்பிலான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகின்றன எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Thiruvin Kural Review: அருள் நிதியின் “திருவின் குரல்” படத்தின் திரை விமர்சனம்!

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை, பிரமோஷன் இல்லை என யார் கூறியது, பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள எந்த சூப்பர் ஸ்டார்களையும் விட அதிகமான எதிர்பார்ப்பில் உள்ளது” என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஓடிடி தளமான Tentkotta-வின் இணை நிறுவனர் வருண் ட்வீட் செய்துள்ளார். மேலும், அமெரிக்காவில் திரையரங்க முன்பதிவு புகைப்படங்களையும் இணைத்து பதிவேற்றியுள்ளார். 

இதே போன்று ட்விட்டர் பயனர் ஒருவர், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு வேகமாக நிரம்பும் திரையரங்க இருக்கைகளைக் காண்பிக்கும் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,”பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் பலத்த வரவேற்புடன் தொடங்கியுள்ளது. இதுவும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போன்றுதான், எதிர்பார்ப்பு குறைவாக உள்ளது போல தோன்றும், ஆனால் முன்பதிவில் அனல் பறக்கும்” என தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் தயாரித்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ், படத்தை அமெரிக்காவில் பரவலாக வெளியிடுகிறது, படத்தை நேரடியாக அந்நாட்டில் விநியோகம் செய்கிறது. ஐமேக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் உள்ளிட்ட பல வடிவங்களுடன், ஏப்ரல் 27ஆம் தேதி அமெரிக்காவில் படம் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. அதன் உலகளாவிய டிக்கெட் விற்பனையில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூலித்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர். பார்த்திபன், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சொப்பன சுந்தரி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *