வட சென்னை கதையில் ஆஸ்னா ஜவேரி

15 ஏப், 2023 – 10:25 IST

எழுத்தின் அளவு:


Azna-zaveri-acting-in-Vadachennai-story

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானர் ஆஸ்னா ஜவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியும் சரியான வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிப்பில் ‘கன்னித்தீவு’ படம் தொலைக்காட்சியில் வெளியானது.

தற்போது தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான சேத்தன் சீனு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் சங்கர் சாரதி என்பவர் இயக்கி வருகிறார். பிரேம், மனோபாலா, சாய்தீனா, ராஜசிம்மன், கராத்தே ராஜா, ராமச்சந்திரன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்று முடிந்த கையோடு உடனடியாக படப்பிடிப்பும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வடசென்னையை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர், ராயபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இது தவிர சிக்மங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இதன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வத் இசையமைக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: