Tamilnadu
oi-Vigneshkumar
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இன்று மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தச் சூழலில் ஓரிரு வாரங்களாகவே மாநிலத்தில் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 13 மடங்கு கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கிட்டதட்ட இதே நிலைதான். இதன் காரணமாகவே மாநிலத்தில் ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் கொரோனா தடுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் இப்போது தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 493 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 469 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று பாதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
எச்சரிக்கை மக்களே.. பச்சிளம் குழந்தைகள் மூளையை தாக்கும் கொரோனா.. அதுவும் தாய் மூலம்.. பகீர் ஆய்வு
மாநிலத்தில் ஆக்டிவே கேஸ்களின் எண்ணிக்கையும் 2876ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 129 பேருக்கு மட்டுமே கொரோனா பதிவானது குறிப்பிடத்தக்கது.
English summary
Tamilnadu Coronavirus daily cases are contiune to raise: Tamilnadu active cases crosses 2800.
Story first published: Friday, April 14, 2023, 21:22 [IST]