ஐதராபாத்: தனது காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்கு ரூ5 லட்சம் செலவு செய்துள்ளார் சிரஞ்சீவி. கார், பைக் ஆகியவற்றை வாங்கும்போது அதற்கான பேன்சி நம்பர்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அரசு தரப்பில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நம்பருக்கேற்றபடி கட்டணங்கள் அமையும். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி சமீபத்தில் எம்யுவி ரக கார் ஒன்றை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வண்டிக்காக ‘1111’ என்ற எண் கேட்டு, அதற்காக 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினார்.

அவர் வைத்திருக்கும் கார்கள் அனைத்திற்குமே ‘1111’ என்ற எண்கள்தான் இருக்கிறதாம். முன்னணி சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களது சொந்த உபயோகங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார்கள். சிலர் அதிகபட்சமாக 20 கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளனர். புதுப்புது மாடல்கள் வரும்போது பழைய கார்களை விற்றுவிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: