
வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் 200 பழங்கால பொருட்கள் கண்டறியபட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்களை வெளிப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்து அதில் 3,254 பொருட்கள் கண்டுபடிக்கபட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கப்பட்டன.
இதில் இரண்டு குழிகள் ஒரு அடி அளவிற்கு தோண்டபட்டள்ள நிலையில், 9 நாள்களில் அதில் சங்குவளையல்கள், எடை கற்கள், சுடுமண்ணால் ஆன காதணிகள், சங்குவளையல்கள், கண்ணாடி மணிகள், காதுமடல், சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருள்கள் தற்போது கண்டுபிடிக்கபட்டுள்ளன.
மேலும் பல்வேறு தொன்மையான பழங்கால பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.