மதுக்கரை வனச் சரகப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ.

மதுக்கரை வனச் சரகப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ.

 

கோவை: கோவை , மதுக்கரை வனச் சரகத்தில் தொடா்ந்து 3ஆவது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது.

சுமாா் 670 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட கோவை வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மதுக்கரை வனச் சரகத்தில் நாதேகவுண்டன்புதூா் அருகே உள்ள மலையில் கடந்த 11ஆ ம் தேதி திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச் சரக ஊழியா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதி பாறைகள் நிறைந்த பகுதியாகும். அங்கு செல்ல முடியாததால் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், பாறை பகுதியில் இருந்து தற்போது மதுக்கரை வனச் சரகத்தில் மங்கலப்பாளையம் வனப் பகுதியில் மூங்கில் மற்றும் புதா்கள் நிறைந்த பகுதிக்குத் தீ பரவி உள்ளது. தொடரும் வனத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் பகுதியில் அடிக்கடி வனத் தீ ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வனத் துறையினா் அங்கு முகாமிட்டு தீ ஏற்படுவதற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையே காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் மேற்கொண்டு வரும்

நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை வனச் சரகத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய காட்டுத் தீ

தொடா்ந்து பரவி வருவதாகவும், இந்தத் தீயால் சுமாா் 10 ஹெக்டோ் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள், தன்னாா்வலா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். மேலும், தற்போது மரத் திட்டுகள் மற்றும் காய்ந்த மூங்கில் திட்டுகளின் கீழ் மலைப் பகுதி வரை தீ பரவி வருவதால் ட்ரோன் மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனா்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *