Delhi
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே இதற்கான காரணத்தை இப்போது விளக்கும் ஆய்வாளர்கள் இது ஆபத்தானதா என்பதையும் விளக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. கடந்த சில காலமாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இன்று மட்டும் 10,158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 7,830ஐ விட சுமார் 30% அதிகமாகும். அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா வைரஸ்: கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து மின்னல் வேகத்தில் பரவினால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதனிடையே இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாகப் பரவ தொடங்கியுள்ள ஓமிக்ரான் XBB.1.16 வகை தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். “ஆர்க்டரஸ்” (Arcturus) என்று அழைக்கப்படும் இந்த கோவிட் வகை தான் இப்போது நாட்டில் கொரோனா திடீரென அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. இந்த வகை கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

மின்னல் வேகம்: கொரோனா பாதிப்பு இப்படி மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் நிலையில், நோயாளிகளின் வருகையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. மேலும், சில மாநிலங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குப் பிறகு மாஸ்க் கட்டாயமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் இந்த ஆர்க்டரஸைக் உருமாறிய கொரோனா முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் சில பிறழ்வுகள் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பும் இந்த XBB.1.16 ஓமிக்ரான் வேரியண்டை கண்காணித்தே வருகிறது.

எச்சரிக்கை மக்களே.. பச்சிளம் குழந்தைகள் மூளையை தாக்கும் கொரோனா.. அதுவும் தாய் மூலம்.. பகீர் ஆய்வு
உலக சுகாதார அமைப்பு: இது குறித்து உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “இது சில மாதங்களாகப் புழக்கத்தில் உள்ளது.. இதன் தீவிர தன்மையில் மாற்றம் ஏற்பட்டதாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இருப்பினும் சில இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. இந்த வேரியண்ட், கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தில் ஒரு கூடுதல் பிறழ்வைக் கொண்டுள்ளது..
ஆய்வகத்தில் வைத்து நாங்கள் ஆய்வு செய்ததில், இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த XBB.1.16 வேரியண்ட் காணப்பட்டாலும் இந்தியாவில் தான் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. மற்ற வேரியண்ட்களை காட்டிலும் இந்தியாவில் இந்த வேரியண்ட் தான் பரவலாக இருந்து வருகிறது” என்றார்.
மாஸ்க் கட்டாயம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா டெஸ்டிங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்போது தான் வைரஸ் பாதிப்பு எந்தளவுக்கு அதிகரிக்கிறது அதன் பேட்டர்ன் என்ன என்பது நமக்குத் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் பேராசிரியர் லாரன்ஸ் யங் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாம் இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை தேவை: இதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. ஒரு புதிய வேரியண்ட் உருவாகும் போது, அது எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறது. அது எந்தளவுக்குப் பரவுகிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். குறிப்பாக வேக்சின் எந்தளவுக்கு தடுப்பாற்றலை தரும் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
மேலும், நாம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சற்று குறைத்துவிட்டோம். இதுவும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம். இதனால் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையும் முக்கியமாகிறது. இல்லையென்றால் எந்த வேரியண்டால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. அது எவ்வளவு தூரம் பரவுகிறது என்பதை நம்மால் கண்டறிய முடியாமலேயே போய்விடும்” என்றார்.
English summary
“Arcturus” is reason behind a fresh surge of Coronavirus in india: India is seeing heuge surge in Covi.
Story first published: Thursday, April 13, 2023, 18:19 [IST]