* ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் கிராஸ்ஓவர்-1ல் ஸ்பெயின் – மலேசியா அணிகள் நேற்று மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் காலிறுதியில் ஆஸ்திரேலியா – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.* வயிற்றுக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மும்பை தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மகாராஷ்டிரா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. * மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நிலையில்,  தேசிய சீனியர் ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *