சோயிப் அக்தர் தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் – ரன்னிங் அகென்டிங் தி ஆட்ஸ்’ படத்திலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார். 

விலகிய அக்தர்

கடந்த ஆண்டு ஜூலை மாதம், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் மோஷன் போஸ்டரை அக்தர் வெளியிட்டிருந்தார். ஆனால், அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவில், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் படத்தின் தயாரிப்பாளர்களுடன் “உறவுகளை துண்டித்துவிட்டதாக” தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அக்தர் தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்து, தனது பெயரையோ, வாழ்க்கையில் நடந்த கதை நிகழ்வுகளையோ எந்த வகையில் பயன்படுத்தினாலும், “கடுமையான சட்ட நடவடிக்கை” எடுப்பதாக எச்சரித்தார்.

news reels

அக்தர் ட்வீட்

“மிகவும் துரதிர்ஷ்டவசமாக, பல மாதங்கள் கவனமாக பரிசீலித்த பிறகு, எனது நிர்வாகம் மற்றும் சட்டக் குழு மூலம் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” படத்திலிருந்தும் அதன் தயாரிப்பாளர்களிடமிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அக்தர் டீவீட்டில் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்: Crime: நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த இளைஞர்கள் – பீகாரில் கொடூரம்

அக்தர் கிரிக்கெட் வாழ்க்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் 46 டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 178, 247 மற்றும் 19 விக்கெட்டுகளை மூன்று வடிவங்களிலும் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை அலற வைத்த காலங்கள் உண்டு. சச்சின், பாண்டிங் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் அவரது பந்துவீச்சை எடுத்திற்கொள்வதை சவாலாக நினைத்தார்கள். கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் 

மேலும் அவருடைய டீவீட்டில், “நிச்சயமாக, இது ஒரு கனவுத் திட்டம், நான் அதில் தொடர்வதற்கு நிறைய முயற்சித்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. கருத்து வேறுபாடுகளை இணக்கமாக தீர்க்கத் தவறியது மற்றும் நிலையான ஒப்பந்த மீறல்கள் இறுதியாக அவர்களுடனான உறவை துண்டிக்க வழிவகுத்தது. எனவே, எனது வாழ்க்கைக் கதைக்கான உரிமையை ரத்து செய்வது தொடர்பான அனைத்து சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றி, திட்டத்தில் இருந்து விலகிவிட்டேன். தயாரிப்பாளர்கள் சுயசரிதை படத்தைத் தொடர்ந்து தயாரித்து, எனது பெயரையோ அல்லது வாழ்க்கைக் கதையையோ எந்த வகையிலும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor