India

oi-Vishnupriya R

குவாஹாட்டி: பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கில் இருந்த போஸ்டரை கிழித்த பஜ்ரங் தளம் கட்சியினர் குறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவிடம் கேட்ட போது அவர் ஷாரூக் கான் யாரென்றே தெரியாது என்றார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருந்த பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜான் ஆபிரஹாம் நடித்துள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸாகிறது.

இந்த படத்தில் பேஷாரம் ரங் என்ற பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் பாடல் முழுவதும் தீபிகா படுகோன் நீச்சல் உடை ஆடையில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பத்தில் மஞ்சள் நிற உடையில் வரும் தீபிகா படுகோன் அணிந்திருந்தார்.

பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி

 ஆடைகள்

ஆடைகள்

அதன் பின்னர் நீளம், வெள்ளை, சிகப்பு உள்ளிட்ட நிறங்களிலாலான ஆடைகளை அணிந்திருந்த தீபிகா படுகோன் ஒரு கட்டத்தில் மிகவும் ஆபாசமாக இருக்கும் வகையில் காவி உடையை அணிந்திருந்தார். அத்துடன் தீபிகாவும் ஷாரூக் கானும் மிகவும் நெருக்கமாக இந்த காட்சிகளில் நடித்துள்ளார்கள். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 புனித நிறம் காவி

புனித நிறம் காவி

இந்துக்களின் புனித நிறமான காவியை இப்படி கொச்சைப்படுத்துவதா என கேட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பாடலை நீக்காவிட்டாலோ அல்லது மாற்றாவிட்டாலோ படம் திரையிடப்படாது என கண்டனங்கள் எழுந்தன. படத்தின் இயக்குநருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பினர்.

மத்திய பிரதேச அமைச்சர்

மத்திய பிரதேச அமைச்சர்

மேலும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், காவி உடையை அவமதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது இந்த பாடல், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் நரோட்டம் தெரிவித்தார். பாலிவுட் திரைப்படங்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமதிக்கிறது. காவி நிறத்தில் அணிந்திருக்கும் பிகினி உடை இந்து மதத்த புண்படுத்துகிறது. எனவே மக்கள் அனைவரும் இதை புறக்கணிக்க வேண்டும்.

திரையரங்குகள்

திரையரங்குகள்

அதையும் மீறி திரையரங்குகளில் திரையிடப்பட்டால் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். இந்த படத்தை எடுத்தவர்களுக்கும் அதுதான் தண்டனை என ஹனுமன் காரி மதத்தின் தலைவர் ராஜு தாஸ் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில் காவி நிறத்தை ஆபாசமாக சித்தரித்த படத்தை யாரும் பார்க்கக் கூடாது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் தெரிவித்திருந்தார்.

 ஷாரூக்கான்

ஷாரூக்கான்

மேலும் சிலர் ஷாரூக்கான்- தீபிகா படுகோன் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையிடப்படுகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் பதான் திரைப்படத்தை திரையிட இருந்த தியேட்டருக்குள் புகுந்த பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

முதல்வர் ஹிமந்தா சர்மா

முதல்வர் ஹிமந்தா சர்மா

இந்த சம்பவம் பரபரப்பானதை அடுத்து நேற்று மாலை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பதான் திரைப்படம் குறித்தும் வன்முறையாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஷாரூக்கான் யாருன்னே எனக்கு தெரியாது என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதையடுத்து ஷாரூக் கான் ரசிகர்கள் முதல்வருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அது போல் பிஸ்வாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

English summary

Assam CM Himantha Biswa Sharma asked who is Shah rukh khan in Pathan issue.

Story first published: Sunday, January 22, 2023, 17:14 [IST]

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *