Loading

* ஐதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின்போது குறுப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யாமால் 3 ஓவர்கள் தாமதமாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 60 சதவீத அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார்.* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரூர்கேலாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 9-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை ஹாக்கி ஏ பிரிவில் முதலிடம் பிடித்து நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.* அரியானா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 50 ரன் வித்தியாசத்தில் வென்ற பெங்கால் அணி 6 போட்டியில் 32 புள்ளிகள் பெற்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஒடிஷா அணியை எதிர்கொள்கிறது.* பார்சிலோனா இரவு விடுதியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகாரில் சிக்கிய முன்னணி கால்பந்து வீரர் டானி ஆல்வெஸ் (பிரேசில்) கைது செய்யப்பட்டுள்ளார்.* தண்ணீர் தெளிக்கப்பட்ட செயற்கைப் புல்தரை மைதானங்களில் ஹாக்கி போட்டிகளை நடத்தும் நடைமுறை, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *