பீஜீங்: சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *