மேட்டுப்பாளையத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்த காவல் துறையினருக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நன்றி கூறினார்கள்

கோவை மாவட்டம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெண்கள் மேல்நிலைப்பள்ளி இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்
தற்போது ஊட்டி மெயின் ரோட்டில் திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி
நடைபெற்று வருவதால்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வாகனங்கள் வருவது அதிகரித்துள்ளது
இதனால் பள்ளிவாயில் முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுவதால்
மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கும் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்
இதனை அறிந்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் காவல்துறையினரிடம் மாணவிகள் பள்ளிக்கு
போக்குவரத்து இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக பள்ளிக்கு வருவதற்கும் பள்ளி துவங்கும் நேரமும் பள்ளிக்கூடம் விடும் நேரமும் அப்பகுதியில் காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்
பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் கோவை மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் IPS
அவர்களின் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு செல்வராஜ், மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சண்முகம், காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி, தனிப் பிரிவு காவலர்கள், ராஜேஷ் ,திருமதி கண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பள்ளி மாணவிகள் இலகுவாக
பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்த
காவல்துறையினருக்கு பள்ளி ஆசிரியர்களும்
பெற்றோர்களும் மாணவிகளும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்
இதுகுறித்து அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி தன்ஷிர கூறியதாவது
நான் கிழக்குத் தெரு பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகிறேன்
ரெண்டு வருஷமா எங்க பள்ளிக்கூடம் எல்லாம் பூட்டி இருந்தது கொஞ்ச நாளாகத்தான் பள்ளிக்கூடம் திறந்திருக்கிறார்கள்
ஆனால் கொஞ்ச நாளா நாங்க வர்ற ரோடு முழுவதும் வண்டிகளை நிறுத்தி போக்குவரத்து நெருக்கடியாக இருந்துச்சு ரோட்டுல நிறைய மாடுகளும் சுத்திக்கிட்டு இருக்கும்
இதனால பள்ளிக்கூடம் போவதற்கு பள்ளிக்கூட விட்டு வீட்டுக்கு போறதுக்கும் ரொம்ப பயந்து கொண்டு இருந்தோம் இன்னைக்கு எங்க பள்ளிக்கூடம் முன்னால
போலீஸ்காரர்களை பாதுகாப்புக்கும் போக்குவரத்தை சரி செய்வதற்கும் போட்டிருக்கிறார்கள்
இதனால பயமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு ஈசியா வந்துட்டோம்
இதே மாதிரியே எப்பவும் எங்க பள்ளிக்கூடம் அருகே
போலீஸ்காரர்களை
பாதுகாப்புக்கு நிறுத்தினார்கள் என்றால் பயமில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு
போயிட்டு வந்துருவோம் என்று கூறியதுடன்
காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *