காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்தும் 11ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை குளித்தலை பகுதியை வந்தடைந்தது. அன்னை காவேரி தாயிக்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் காவிரி படித்துறையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சுவாமி இராமானந்தா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது காவேரி நதி நீரை தூய்மையாக வைத்துக் கொள்ள தொழிற்சாலை மற்றும் மருத்துவ கழிவுகள் கலக்காதவாறு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் உத்தரவை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நமது தொடர் கோரிக்கையை ஏற்று அகண்ட காவிரியை உடைய இந்த குளித்தலை பகுதியில் நீரை சேமிக்க கதவணை தமிழக அரசு கட்டுவதற்கு அறிவித்துள்ளது. அதன்படியே அந்த கதவணை பணியினை விரைவில் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு மிக முக்கியமாக காவிரியில் மணல் அள்ளுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளர் அருள்வேலன் ஜி , சமூக ஆர்வலர் கோபாலதேசிகன் மற்றும் பொறுப்பாளர்கள் சேட் வாழக்காய் வியாபாரி , ராமகிருஷ்ணன் , அர்ச்சகர் கல்யாண வெங்கட்ராமன் , மதி , வினோத் , விஸ்வநாதன் , சந்தோஷ் , பிரகாஷ் , பரமேஸ்வரன் , சுந்தர் ஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *