டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் தீவிரவாதத் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2 -ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

T 20 World Cup

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின்போது கரீபியன் (வெஸ்ட் இண்டீஸ்) நாடுகளை குறிவைத்துத் தாக்குவோம் என்று வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், 2024 டி20 உலகக் கோப்பை உட்பட உலகின் முக்கிய நிகழ்வுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ்ஸ், “ டி20 உலகக் கோப்பை நடத்துவது குறித்து நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

ind vs pak

உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே போட்டி நடைபெறும் நகரங்களில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதி செய்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *