ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு சேவை துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவின் சேவை துறைகளாக வர்த்தகம், உணவகங்கள், வங்கி சேவைகள், தொழில்நுட்ப ஆராய்ச்சி, காப்பீடு, போக்குவரத்து, விடுதிகள், சுற்றுலா, ரியல் எஸ்டேட் போன்றவை உள்ளன. 

இந்நிலையில் இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது என ஹெச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணானது (PMI) அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவை விட வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tourism - Representational Image

Tourism – Representational Image
Image by Rudy and Peter Skitterians from Pixabay

இந்தியாவின் பிஎம்ஐ குறியீட்டு எண் மார்ச் மாதத்தில் 61.2ஆக இருந்து மதிப்பீட்டு மாதமான ஏப்ரலில் 60.8 ஆக ஆனது. இது 14 ஆண்டுகளில் காணப்பட்ட வலுவான வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசியின் தலைமை இந்தியப் பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், “இந்தியாவின் சேவை செயல்பாடு ஏப்ரல் மாதத்தில் மெதுவாக உயர்ந்தது. இதற்கு புதிய ஆர்டர் மற்றும் உள்நாட்டு தேவைகளின் அதிகரிப்பு முக்கிய காரணம்”‘ என்று குறிப்பிட்டுள்ளார். 

புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சாதகமான பொருளாதார நிலைமைகள் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் சேவைகளுக்கான தேவை அதிகரித்தது முக்கிய காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *