பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்சில் நடந்த கான் திரைப்பட விழாவில் பெரிய கட்டுடன் காணப்பட்டார். அந்த கட்டோடு திரைப்பட விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பு வாக்கிங்கிலும் பங்கேற்றார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மும்பையில் ஓட்டுப்போட வரும் போதும் கையில் கட்டுடனே வந்தார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது. எப்படிக் காயம் ஏற்பட்டது என்பது குறித்து ரசிகர்களும், நலன் விரும்பிகளும் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது.

இம்மாதம் 11-ம் தேதி ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்துவிட்டாராம். இதில் அவரது ஒரு கை உடைந்துவிட்டது. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்துத்தான் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கான காஸ்டியூம் குறித்து முடிவு செய்யப்பட்டதாம். மேலும் கவனமாக இருக்கும் படியும், மேற்கொண்டு ஒரு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவேண்டாம் என்றும் டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

பின்னர் கையில் அதிக அளவில் வீக்கம் இருந்ததால் வீக்கம் குறைந்த பிறகு ஆபரேசன் செய்யவேண்டும் என்றும், திரைப்பட விழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் டாக்டர்கள் அனுமதி கொடுத்துள்ளனர். தற்போது அவருக்கு ஆபரேசன் செய்யப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிஸியோதெரபி செய்து கொள்ள இருக்கிறார். “பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் புதிய படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகுதான் அடுத்த பட வேலையில் இறங்குவார் என்று தெரிகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *