எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமுகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான  மிராய் உலகில்  ‘தி பிளாக் வாள்’  எனும் வாள் வீரனாக அவதாரமெடுக்கிறார். இப்படத்தில் சூப்பர் யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பிரபல படைப்பாளி கார்த்திக் கட்டமனேனி இப்படத்தை இயக்குகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இணையற்ற உற்சாகம் நிறைந்த இந்த சூப்பர் ஹீரோ  பிரபஞ்சத்தில், மனோஜ் அறிமுகமாகிறார்.

மனோஜ்  பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜின் “தி பிளாக் வாள்” கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு விசித்திரமான ஆயுதத்துடன், வெட்டவெளி நிலப்பரப்பின் பின்னணியில் தோற்றமளிக்கிறார். ஸ்டைலுடன் வித்தியாசமான கலவையில் தோற்றமளிக்கும் அவரது கதாபாத்திர லுக்,  பார்க்கும்போதே நம்மை மயக்குகிறது. கருப்பு வாள் வீரனாக மின்னுகிறார் மனோஜ். போனிடெயில் மற்றும் ஸ்டைலான தாடியுடன் நீண்ட கூந்தலைக் கொண்ட மனோஜ், அறிமுகக் காட்சியில் லாங் கோட் அணிந்து மிக நாகரீகமாகத் தோன்றுகிறார், அதைத் தொடர்ந்து டி-ஷர்ட்டுடன் பிளேசரில் மற்றொரு அதிரடி-சீக்வென்ஸில் தொடர்ந்து காட்சியளிக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஒரு நடிகராக அவருடைய பன்முகத் திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பாத்திரம், படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்குமென  எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு கூறுகையில்.., “இத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் புதிரான கதாபாத்திரத்துடன் மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வருவது சவாலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. “கருப்பு வாள் வீரன் என்பது வலிமை மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய  ஒரு  அழுத்தமான பாத்திரம். நான் மீண்டும் திரைக்கு திரும்பி வருவதற்கு பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

பிரமிக்க வைக்கும்  கதைகள் நிறைந்த உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட இப்படம், பாரம்பரிய வீரம் மற்றும் நவீன கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும்.  இது அசோகரின் 9 அறியப்படாத புத்தகங்களின் ரகசியங்களை ஆராய்கிறது, வரலாறு மற்றும் புராணங்களின் அடிப்படையில்  ஒரு காவியக் கதையாக அசத்தவுள்ளது.

முன்னதாக, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு பெரும்  வரவேற்பைக் குவித்தது, இப்போது ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சுவின் பிறந்தநாளில் அவரது கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்   வெளியிடப்பட்டு  வரவேற்பைக் குவித்து வருகிறது. மனோஜ் தெலுங்கு சினிமாவுக்கு மட்டும் மீண்டும் திரும்பவில்லை, அதைத்தாண்டி மீண்டும் ஒரு பெரும் நடிகனாக திரைத்துறைக்கு சவால் விடும் பாத்திரத்தில் அசத்தவுள்ளார். 

மேலும் படிக்க | காணாமல் போன கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்!? வசூல் இவ்வளவுதானா?

தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் கட்டமனேனி திரைக்கதையை எழுதியுள்ளார், அவருடன் இணைந்து மணிபாபு கரணம் வசனம்  எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கலை இயக்குநராக ஸ்ரீ நாகேந்திரா தங்காவும், இணை தயாரிப்பாளராக விவேக் குச்சிபோட்லாவும் பணியாற்றுகிறார்கள். கிருத்தி பிரசாத் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

மிராய் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் அடுத்த கோடையில் ஏப்ரல் 18 ஆம் தேதி 2டி மற்றும் 3டி பதிப்புகளில் வெளியிடப்படும். 

மேலும் படிக்க | யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *