அதோடு தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் தனது நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்தால் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று மிரட்டினார். “இந்தத் துறையில் உங்களுக்கு வேலை கிடைப்பதை என்னால் சாத்தியமற்றதாக்க முடியும்’’ என்றார். 

அவர் பேசிய தொனியும், சக ஊழியர்கள் மீதான அவரின் நிலைப்பாடும், அலட்சியமும் பச்சாதாபமின்மையும் மோசமானதாக இருந்தது. இவர் பேசியுள்ள வீடியோக்கள் வைரலானதோடு, கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. 

பரவலான மக்களின் கோபத்துக்குப் பிறகு, அவர் வெளியிட்ட நான்கு வீடியோக்களையும் நீக்கி மன்னிப்பு கோரியுள்ளார். தனது வீடியோக்கள் பைடுவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும், அவற்றை வெளியிடுவதற்கு முன் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் கூறினார்.  

அதோடு `பல்வேறு தளங்களில் இருந்து வந்த அனைத்து கருத்துகளையும் நான் கவனமாகப் படித்தேன். மேலும், பல விமர்சனங்கள் மிகவும் பொருத்தமானவை. நான் அதை ஆழ்ந்து சிந்திக்கிறேன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சீனாவின் பிரபல சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *