27 வருடங்களாகப் பெண்ணாக வாழ்ந்து வந்த சீனாவைச் சேர்ந்த லி யுவான் என்பவர், திருமணத்துக்கு முன்னர் ஆண் என்பதை அறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சீனாவில் வசித்து வரும் லி யுவான் என்ற பெண், சீரற்ற மாதவிடாய் சுழற்சி, பருவமடைந்ததிலிருந்து தாமதமான மார்பக வளர்ச்சி போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். இதனால் 18 வயதிலிருந்தே அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். 

முதலில் ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பதும் கருப்பை செயலிழப்பும் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் குரோமோசோம் பரிசோதனையைப் பரிந்துரைத்தனர். அந்தச் சமயத்தில் யுவானும் அவரின் குடும்பத்தினரும் மருத்துவர்களின் அறிவுரையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

சில வருடங்கள் கழித்து மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணரான டுவான் ஜீ, யுவானின் திருமணத்துக்கு முன்பு முழுமையான பரிசோதனையைச் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். 

பரிசோதனைகளைச் செய்துகொண்டவருக்கு congenital adrenal hyperplasia (CAH) என்ற அரிய கோளாறு இருப்பது தெரிந்தது. அவருக்கு ஆண் பாலின குரோமோசோம்கள் இருப்பதைச் சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தின. ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடிவயிற்றின் உள்ளே இருந்தது. ஆனால், அவர் பெண்ணாகத் தெரிந்தார். 

50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

யுவானுக்கு இது அதிர்ச்சியூட்டும் அடியாக இருந்தது, உண்மையை ஏற்றுக்கொள்வது அவருக்குச் சவாலாக இருந்தது. `மேலும் சமூக ரீதியாக, லி ஒரு பெண். ஆனால், குரோமோசோமில் அவர் ஆண்தான்” என மருத்துவர் டுவான் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *