அதன்படிதான் பயிற்சியும் நடக்கும். இதனால் கொல்கத்தா வீரர்களால் எந்த தயக்கமும் இல்லாமல் தாங்கள் விரும்பும் பெரிய ஷாட்டை முதல் பந்திலேயே கூட ஆட முடியும். இதுதான் கொல்கத்தா வீரர்கள் அக்ரஸிவ்வாக ஆடுவதன் ரகசியம்.’ என்றார்.
முத்துவின் விளக்கத்தோடு இணையத்தில் வைரலாகி வரும் ரிங்கு சிங் பயிற்சிலும் ஆட்டத்திலும் சிக்சர் அடிக்கும் ஒப்பீடு வீடியோவை பார்த்தால் நமக்கே புரிந்துவிடும்.
ஒற்றை கையில் பேட்டை தலைக்கு மேல் சுழற்றி ரிங்கு சிங் அடிக்கும் அந்த ஷாட்டை போட்டிக்கு முந்தைய நாளில் பல முறை பயிற்சி செய்கிறார். போட்டியன்று அந்த ஷாட்டை எந்த தயக்கமும் இன்றி ஆடுகிறார்.