அக்ரா: ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகரம் அக்ராவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் நூமோ பார்கடே லாவே சுரு எனும் 63 வயது மத போதகர். நுங்குவாவின் பூர்வக்குடி மக்களுக்கு மதகுருமாராக இவர் இருந்து வருகிறார். கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே மணமுடிக்கலாம். இருப்பினும் சமய சடங்குகளை முன்னிறுத்தி 12 வயது சிறுமியை மத போதகர் சுரு கடந்த சனிக்கிழமை அன்று மணமுடித்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கானா அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பினர்.

மறுபுறம், பாரம்பரிய முறைப்படி இத்திருமண நிகழ்வு நடந்திருப்பதால் அதில் தலையிட மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லைஎன்று வேறு சில மதத்தலைவர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.தற்போது மணமுடிக்கப்பட்ட சிறுமிக்கு 6 வயது ஆன போதே இத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை சிறுமிக்குக் கல்வி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இது சமய சடங்கு சார்ந்த திருமணமே அன்றி வேறில்லை என்று சிலர் தெரிவித்தனர். ஆனால், விசாரணையில் அச்சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

இதேபோன்று கானா நாட்டில் மேலும் பல பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன்பே திருமணம் முடித்துக் கொடுக்கப்படும் கொடுமை இன்றுவரை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *