விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு’, ‘குக்கு வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. சின்னத்திரையில் கிடைத்த புகழ், சினிமா வாய்ப்புகளையும் வழங்க, சில படங்களிலும் தலைகாட்டினார். சமீபமாக உதவிகள் தேவைப்படுபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலம் பரவலாகக் கவனிக்கப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் மலைக்கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தந்தார்.
மேலும், ஆட்டோ, தையல் மெஷின், திருமணச் செலவுகள் என ஏழை எளிய மக்களுக்கு அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் தன் திருமணம் குறித்துப் பேசியிருந்தார் பாலா. தான் காதலித்து வந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வருமெனவும் கூறியிருந்தார்.
தற்போது பாலாவின் நட்பு வட்டத்திலிருந்து நமக்குக் கிடைத்த தகவல் என்னவெனில், பாலா காதலித்து வந்த பெண்ணின் வீட்டில் அவருக்குப் பெண் தரத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுதான்.
“காரைக்காலைச் சேர்ந்த பாலா காதலிச்சு வந்த பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்தவங்கதான். ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிச்சு வந்தாங்க. முதல்ல பாலாவைத் திருமணம் செய்ய அந்தப் பொண்ணு வீட்டுல சம்மதம் தெரிவிச்சாங்க. ஆனா இப்ப என்னன்னு தெரியலை, தயக்கம் காட்டுறாங்க. பாலா பலருக்கும் உதவிகள் செஞ்சுட்டு வர்றதைப் பத்தி அந்தப் பெண்ணுடைய அப்பா அம்மாகிட்ட யார் என்ன சொன்னாங்களோ தெரியலை…
+ There are no comments
Add yours