கோட்ஸி, ப்யூஸ் சாவ்லா ஆகிய இருவராலுமே பெரிதாக எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இரு பேக் டு பேக் அரை சதங்கள் பராக்கின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அணிக்கு அவர் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளன.

12 மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் என சின்ன சின்ன வெற்றியை சுவைத்த ராஜஸ்தானுக்கு இது பெரிய வெற்றிதான். டாஸினை வென்றது சாதகமானது என்றாலும் எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டத்தைத் தங்களது பிடியில் இருந்து ராஜஸ்தான் நழுவ விடவில்லை. பௌலர்கள் ஆதிக்கம் அவர்களை புள்ளிப் பட்டியலின் முதல் இடத்தில் அமர்த்தி உள்ளது.

மும்பையோ நேர்மாறாக டேபிளின் அடியில் பதுங்கியுள்ளது. பேப்பர் அளவில் பலம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட அணிகளில் மும்பையும் ஒன்று. தலைமை மாற்றம், உட்கட்சிப் பூசல், அடுத்தடுத்த தோல்விகளால் ஏற்பட்ட மனோரீதியான பின்னடைவு, அணிக்குள் ஒருங்கிணைப்பு இன்மை, ஒருசில ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள மனத் தாங்கல் என பல காரணங்களும் மும்பையின் ஹாட்ரிக் தோல்விக்குக் காரணம்தான்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *