Nala Damayanthi Zee Tamil Serial Latest Update: தொலைக்காட்சி தொடர் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. உள்ளூர் கதையாடல்கள் முதல் குடும்பங்களுக்கு மிகவும் நெருக்கமான கதையமைப்பை கொண்டு தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கப்படுவதால் திரைப்படங்களுக்கு இருக்கும் அதே அளவில் ரசிகர் கூட்டம் தொலைக்காட்சி தொடர்களுக்கும் உள்ளன.

தமிழிலும் தொலைக்காட்சி தொடர்கள் பிரபலமானதாக உள்ளன. குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை மாலையில் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பார்க்கும் அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. தற்போது ஓடிடி யுகத்தில், நீங்கள் ஒரு நாள் எபிசோடை தவறவிட்டாலும் உங்கள் மொபைல் அல்லது வேறு சாதனங்களிலோ உடனடியாக எங்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளன.

அன்னபூரணியின் மகள் தமயந்தி…

அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பல்வேறு தொடர்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நளதமயந்தி தொடரும் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கடந்த வாரம் நளன் தேடும் அன்னபூரணியின் மகள் தமயந்திதான் என்ற விஷயம் ஷைலஜாவுக்கும் அவளது மகள் ஆரத்தனாவுக்கும் தெரிய வந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்த அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: சமையலால் எழிலை கவுத்த சுடர்.. மனோகரி பார்த்தா என்ன ஆகுறது?

அதாவது, ஷைலாஜாவும் ஆரதனாவும் நளனுக்கு கடைசி வரை தமயந்திதான் அன்னபூரணியின் மகள் என்பது தெரிய கூடாது, அன்னபூரணி தொடர்பாக இருக்கும் ஆதாரங்களை அழிக்க திட்டம் போடுகின்றனர். மேலும் இவர்கள் எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கு நளனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவன் கழுத்தில் இருக்கும் லாக்கெட்டையும் திருடுகின்றனர். 

நளன் – தமயந்தி கடும் போட்டி

தமயந்தியின் தம்பி வருணை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கின்றனர், இதனால் தமயந்தி செய்வதறியாது தவிக்க நளன் அவளுக்காக உதவ முன் வருகிறான். அடுத்து சமையல் போட்டியில் அடுத்த ரவுண்ட் குறித்து தெரிய வருகிறது, இவர்கள் போட்டிக்கு கிளம்பி செல்கின்றனர். இன்வெஸ்டர் நளனுக்காக விளையாடினா அவனுக்கு இன்வெஸ்ட்மென்ட் கிடைக்கும் நீயும் நல்லா இருக்கலாம் என்று பேச தமயந்தி அவருக்கு பதிலடி கொடுக்கிறாள். 

இதனால் கடுப்பாகும் இன்வெஸ்டர் நீ தமயந்தியை ஜெயித்தால் மட்டும் தான் இன்வெஸ்ட் பண்ணுவேன். ஒரு வேளை தோத்து போயிட்டா உன்னுடைய ஓட்டல் பிசினஸ் கனவையே ஒன்னும் இல்லாமல் பண்ணிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனையடுத்து போட்டி தொடங்க நளனுக்கும் தமயந்திக்கும் கடுமையான போட்டி நடக்கிறது.

Zee5 இலவசம்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் பாருங்க. 

நளதமயந்தி சீரியல் கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக, அதாவது தமயந்தி பாத்திரத்தில் நடிகை பிரியங்கா நல்காரியும், நளன் பாத்திரத்தில் நடிகர் நந்தாவும் நடித்து வருகின்றனர். இந்த தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமின்றி நீங்கள் Zee5 ஓடிடி தளத்திலும் இலவசமாக எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்! கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *