Shivam Mavi Ruled Out IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகின் மிக பிரபலமான டி20 தொடரான இதில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய நட்சத்திர வீர்ரகள் மட்டுமின்றி பல திறமையான உள்நாட்டு வீரர்களும் அதிக கவனத்தை பெறுவார்கள். வெளிநாட்டு வீரர்களிலும் கூட டிவால்ட் பிரேவிஸ், மபாகா போன்ற இளம் வீரர்களும் ஐபிஎல் தொடரின் மூலமே சர்வதேச வெளியில் தற்போது அறியப்படுகின்றனர்.

நடப்பு தொடரை எடுத்துக்கொண்டால் ஹர்ஷித் ராணா, ரியான் பராக், அபிஷேக் சர்மா, மயாங்க் யாதவ், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், நமன் திர், ஆகாஷ் மத்வால் என பல வீரர்கள் எதிர்கால இந்திய அணியில் இடம்பிடிக்கக் கூடிய வீரர்களாக தென்படுகின்றனர். இதில் ரியான் பராக், அபிஷேக் சர்மா, அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர் ஆகியோர் முறையே ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு அணிகள் அவர்கள் மிக மிக இளம் வயதில் இருந்து தற்போது வரை பார்த்து பக்குவமாக வளர்த்திருக்கின்றன எனலாம். 

அடுத்து உலகக் கோப்பை

ஐபிஎல் தொடர் (IPL 2024) என்பது இதுபோன்ற திறமைகளை கண்டெடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருந்துகிறது என்பதை நாம் கடந்த காலங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம். தற்போது இந்திய அணியில் ஆலமரமாக வளர்ந்து நிற்கும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சிராஜ், கேஎல் ராகுல் ஆகிய அனைவரும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஐபிஎல் தொடர்களில் தங்களை நிரூபித்த காரணத்தால்தான் முன்னேற்றம் கண்டுள்ளனர் எனலாம்.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பையில் இருந்து விலகி கொள்கிறேன்! முக்கிய வீரர் திடீர் அறிவிப்பு!

நடப்பு ஐபிஎல் தொடர் நிறைவடைந்த உடன் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை இந்தியா தேர்வு செய்ய உள்ளது என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களையே இந்திய அணி தேர்வு செய்யும் என்றாலும் ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் என இதுநாள் வரை டி20 போட்டிகளுக்கு என வளர்க்கப்பட்ட வீரர்கள் நடப்பு சீசனில் சற்று சுணக்கம் காட்டி வருகின்றனர். எனவே, யாரை புதியதாக டி20 உலகக் கோப்பையில் சேர்ப்பார்கள் என்பதில் பெரும் கேள்வியே உள்ளது.

சிவம் மாவிக்கு காயம்

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில சீசன்களில் சிறப்பாக விளையாடி வந்த இளம் வேகப்பந்துவீச்சாளரான சிவம் மாவி இந்த சீசனில் கொல்கத்தாவில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணிக்கு வந்தார். அவரை லக்னோ அணி காம்பினேஷனுக்குள் கொண்டு வரும் பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் விளையாடவே இல்லை. தற்போது மயங்க் யாதவின் (Mayank Yadav) எழுச்சி அவருக்கான வாய்ப்பை குறைத்துவிட்டது எனவும் கூறலாம். 

இந்நிலையில், அவர் தொடரில் இருந்து விலகியிருப்பதாக லக்னோ அணி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சிவம் மாவி (Shivam Mavi) காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். திறமை வாய்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் டிசம்பரில் ஏலத்திற்குப் பிறகு எங்களுடன் சேர்ந்தார். சீசனுக்கு முந்தைய காலத்தில் இருந்து எங்கள் பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக அவர் இருந்தார்.

இந்த சீசனில் அவர் லக்னோ அணியில் முக்கிய அங்கம் வகித்தார். அவர் தற்போது இவ்வளவு சீக்கிரம் தொடரில் இருந்தே விலகியிருப்பது நாங்களும் சிவம் மாவியும் ஏமாற்றம் அடைகிறோம். எங்கள் அணியானது சிவம் மாவியை தொடர்ந்து ஆதரிக்கும். அவர் மீண்டும் உடற்தகுதி பெறும் மீட்புச் செயல்பாட்டில் அவருக்கு உதவ எங்கள் அணி உறுதிபூண்டுள்ளது. அவர் விரைவாகவும் முழுமையாகவும் இயல்புநிலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் அவர் மீண்டும் உடற்தகுதியுடனும் வலிமையுடனும் வருவார் என்பதில் உறுதியாக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு… தாயகம் பறந்த முக்கிய பவுலர்… காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *