ஜனவரியில், சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கால்தடங்கள் கண்டுபிடிப்பை நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிட்டது. இந்த கால்தட அடையாளங்கள் 100,000 ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. இந்த கால்தடங்கள் ஐந்து பேருடையது என்றும் நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை பல நூற்றாண்டுகள் பழமையான பொருட்களும் தடயங்களும் நமக்கு தெரிவிக்கின்றன. அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்? என்பதையும் இந்த காலதடங்கள் மூலம் அறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். பழமையான கால்தடம் மொராக்கோவில் உள்ளது. 

இந்த கால்தடங்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானது என கணக்கிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். அந்த நேரத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை ஆய்வாளர்கள் நேச்சர் இதழ் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில் மொராக்கோ, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் இருந்துள்ளனர். மொராக்கோவின் வடக்கு நகரத்தில் பாறைகள் நிறைந்த கடற்கரையில் இந்த 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | ஹங்கேரி அதிபர் ராஜினாமா… மக்களின் எதிர்ப்பால் பதவி விலகல் – காரணம் என்ன?

ஜூன் 2022 -ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மவுன்செஃப் செட்ராட்டி, லாராச்சி நகரில் வெவ்வேறு அளவுகளில் கால்தடங்களைக் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘முதல் கால்தடத்தின் அடையாளத்தை கண்டுபிடித்த பிறகு, 100 சதவீதம் உறுதியாக தெரியாமல், இரண்டாவது, மூன்றாவது அடையாளங்களை கண்டுபிடித்தோம்.” என கூறினார்.  சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு மணல் நிறைந்த கடற்கரை வண்டல்களில் ஹோமோ சேபியன்ஸால் ஆரம்பகால தடயங்கள் விடப்பட்டன. மொத்தம் 85 சதவீத கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது ஐந்து பேர் கொண்ட குழுவால் செய்யப்பட்டிருக்க வேண்டும். யார் இந்த வழியாக தண்ணீரை நோக்கி நடந்தார்களோ அவர்களின் கால்தடங்களாக இருக்க வேண்டும். வட ஆபிரிக்கா மற்றும் தெற்கு மத்தியதரைக் கடலில் காணப்படும் முதல் ஆரம்பகால மனித தடங்கள் இவை. இந்த ஐந்து பேரும் பெரியவர்களாகவும் வெவ்வேறு வயது குழந்தைகளாகவும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் எதற்காக இங்கு வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உணவு பெற கடலுக்கு வந்திருப்பார்களா? அல்லது அலைந்து திரிந்தார்களா? இவர்கள் எவ்வளவு காலம் இங்கு தங்கியிருந்தார்கள் என்பதைக் கண்டறியும் முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட 461 புகைப்படங்களை விஞ்ஞானிகள் குழு அச்சிட்டுள்ளது. இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கால்தடங்களின் அளவு மற்றும் பழங்கால மக்களின் சரியான வயதைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விஞ்ஞானிகள் இங்கிருந்து மஞ்சளையும் கண்டுபிடித்துள்ளனர். மதச் சடங்குகளின் போது பெண்கள் அலங்காரமாகப் இதனை பயன்படுத்துவார்கள். அதை பெண்கள் உடம்பில் பூசிக்கொள்வார்கள்.

இதுதவிர, அவர்கள் பயன்படுத்திய உலைகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பண்டைய மனிதர்களுக்கு நெருப்பை எரிக்கத் தெரியும் என்பதைக் காட்டுகிறது. எலும்புகள் மற்றும் கல் கருவிகளின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழங்கால மனிதர்கள் உணவுக்காக இறந்த விலங்குகளைச் சார்ந்து இருந்ததாகவும், சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே பொறிகளை அமைத்து விலங்குகளை வேட்டையாடத் தொடங்கியிருக்கலாம் என்பதையும் இந்த கண்டுபிடிப்புகள் வெளிக்காட்டுகின்றன. 

மேலும் படிக்க | ஒரு தாயின் கவனச்சிதறல்?… ஒரு மாத பெண் குழந்தை பலி – அதிர்ச்சி சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *