கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, கூடைப்பந்து ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான் அணிகள் மோதின. தமிழ்நாடு அணி லீக் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அது ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிதான்.

தமிழ்நாடு அணி

அந்தப் போட்டியில் 82-52 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை ராஜஸ்தான் அபாரமாக வென்றிந்தது. இதனால் இறுதிப்போட்டி குறித்த பதற்றம் பார்வையாளர்களிடம் அதிகம் இருந்தது. ஆனால் தமிழ்நாடு அணி வீரர்களிடம் அந்தப் பதற்றம் துளியும் இல்லை.

கடந்த போட்டியில் மாணிக்கமாக ராஜஸ்தானிடம் அடி வாங்கிய அதே தமிழ்நாடு அணி, இந்தப் போட்டியில் பாட்ஷாவாக மாறி பட்டையைக் கிளப்பியது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி முன்னிலை வகித்தது. ஒருகட்டத்தில் 27-11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி முன்னிலையில் இருந்தது.

தமிழ்நாடு அணி

‘ஒன் சைடு மேட்ச் ஆகிவிடுமோ’ என்ற எண்ணம் லேசாக எட்டிப் பார்த்தவுடனே, ராஜஸ்தான் அணி கம்பேக் கொடுத்தது. இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுக்கவே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தமிழ்நாடு அணி கேப்டன் பிரகலாதன், அபிமன்யு, சுகந்தன், மிதுன் வேல், சாம் லக்ஸ்வின் ஜேக்கப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி முன்னிலை பெற முடியவில்லை.

தமிழ்நாடு அணி

இருப்பினும் கடைசிவரை அந்த அணி முன்னிலை பெறத் தீவிரமாகப் போராடியும் முடியவில்லை. இறுதியில் 86-85 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

போட்டி குறித்து நம்மிடம் பேசிய வீரர்கள், “ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதிலிருந்து பல பாடங்களையும் கற்றுக் கொண்டோம். என்ன ஆனாலும் பரவாயில்லை இவர்களை வீழ்த்தி வெற்றி பெறவேண்டும் என்ற முடிவுடன் இறங்கினோம். தொடக்கம் முதலே அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தமிழ்நாடு அணி

இடையில் சில தவறுகளால் வித்தியாசம் சற்று குறைந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், கூடைப்பந்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி!” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *