பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்தமேற்கு இந்தியத் தீவுகள் 25.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 4, தகேநரைன் சந்தர்பால் 21, கிர்க் மெக்கென்சி 21, அலிக் அத்தனாஸ் 8, ஜஸ்டின் கிரீவ்ஸ் 6 ரன்களில் நடையை கட்டினர்.6-வது விக்கெட்டுக்கு கவேம் ஹாட்ஜுடன் இணைந்த ஜோஷுவா டி சில்வா சிறப்பாக இன்னிங்ஸை கட்டமைத்தார். இதனால் 75-வது ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 200 ரன்களை எட்டியது. சிறப்பாக பேட் செய்து வந்த கவேம் ஹாட்ஜ் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்திலும் ஜோஷுவா டி சில்வா 157 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய அல்சாரி ஜோசப் 22 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 89.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. கெவின் சின்கிளேர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *