Ravi Shahstri On IND vs ENG Test: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதளிக்கும் விழா ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இந்திய சீனியர் ஆடவர் அணியினர், இந்திய சீனியர் மகளிர் அணியினர், இந்திய மூத்த வீரர்களான ஃபரூக் இஞ்சினியர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, இந்திய சீனியர் ஆடவர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

அதுமட்டுமின்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் வருகை தந்திருந்தது. குறிப்பாக, இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், பயிற்சியாளர் பால் காலிங்வுட் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இதில், இந்திய வீரர்கள் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது மூத்த வீரர்களான பரூக் இஞ்சினியர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வழங்கினர். இந்த விருது விழாவில் பரூக் இஞ்சினியர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் மேடைப் பேச்சு பலரையும் கவர்ந்தது.

மேலும் படிக்க | IND v ENG: விராட் கோலிக்கு பிறகு மேலும் ஒரு வீரர் விலகல்! பயிற்சியின் போது காயம்!

அஸ்வின் ஹேர்கட்

குறிப்பாக, ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியினருக்கு இந்திய சுழற்பந்து ஆடுகளங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தது இந்திய முகாமில் பெரும் கரகோஷத்தை ஏற்படுத்தியது எனலாம். விருது வாங்கிய பின்னர் இந்திய அணியினர் குறித்து ரவி சாஸ்திரி பேசியபோது,”அஸ்வின், வரும் இங்கிலாந்து தொடரில் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என கூறியிருந்தார். அப்படியானால் இப்போது அவரின் ஹேர்கட், அவரது மூளையை இன்னும் சுதந்திரமாக்கும், காற்று நன்றாக செல்லும் போது, இப்போது அவர் என்ன நினைக்கிறார் என்று உங்களால் (இங்கிலாந்து) கற்பனை செய்ய முடியுமா? எனவே பந்துவீச்சில் ‘தீஸ்ரா’ இருக்கலாம், ‘சௌதா’ இருக்கலாம். அடுத்த இரண்டு மாதங்களில் இங்கிலாந்து மிக விரைவில் அதை கண்டுபிடிக்கும். 

கிரிக்கெட் ஒரு சிறந்த விளையாட்டு என்று இளம் வீரர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், இதுவே எனது முதல் அறிவுரை. வெற்றிக்கு குறுக்குவழி இல்லை. செவ்வாய்கிழமை நீங்கள் ஒரு ஹீரோவாக இருப்பீர்கள், பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதள பாதாளத்தில் இருப்பீர்கள். எனவே நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் போதே வருமானத்தை பெறுங்கள், இன்னும் உறுதியாக இருங்கள். இந்த நாட்களில் விளையாட்டில் இருக்கும் நல்ல வருமானத்துடன், உங்களுக்கு எந்த ஊக்கமும் தேவையில்லை.  ஒவ்வொரு நாளும் நேற்றை விட சிறப்பாக செய்யுங்கள்

நியாயமாக விளையாடுங்கள்

“நான் இங்கு இங்கிலாந்து அணியைப் பார்க்கவில்லை. ஆனால் பாஸ் (மெக்கலம்) இங்கே இருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு வாழ்த்துக்கள். இது எப்பொழுதும் ஒரு முக்கியமான தொடர், நீண்ட நாட்களுக்கு பிறகு 5 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளோம். கடினமாக விளையாடுங்கள், நியாயமாக விளையாடுங்கள், விதிகளுக்கு உட்பட்டு நன்றாக விளையாடுங்கள். விளையாடியதற்கு பிறகு ஆட்ட நேர்மை குறித்தும் பேசுங்கள்” என்று இங்கிலாந்து தரப்பு எள்ளி நகையாடினார். வழக்கமாக, இங்கிலாந்து அணி இந்தியா வரும் போது ஆடுகளம் குறித்த பிரச்னை எழும். 

அதாவது, இங்கிலாந்து தரப்பினர் சுழற்பந்துவீச்சு சாதகமாக இந்தியா ஆடுகளங்களை அமைப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கும். அதற்கு இந்திய தரப்பில் இருந்து பலரும் பதிலடி கொடுப்பார்கள். உதாரணத்திற்கு, வாசிம் ஜாபர் – மைக்கெல் வாகன் ஆகியோருக்கு இடையே நடக்கும் வார்த்தை சண்டை இணையத்தில் மிக பிரபலம் எனலாம். அதை இந்த தொடரிலும் நாம் எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | U19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த பிஸ்தா பேட்டர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *