மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 18-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரன்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 69-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஹெஸுடன் மோதினார். 3மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவ் 6-3, 7-6 (7-4), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான போலந்தின் ஹியூபர்ட் ஹர்காஸ் 7-6 (8-6), 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஆர்தர் கசாக்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

6ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 4 மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி 22-ம் நிலை வீரரான இங்கிலாந்தின கேமரூன் நோரியை 7-5, 3-6, 6-3, 4-6, 7-6(10-3) என்றசெட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் அல்கராஸ் 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் 60-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரன்கா, 93-ம்நிலை வீராங்கனையான உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை எதிர்த்து விளையாடினார். இதில் விக்டோரியா அசரன்கா 6-7 (6-8), 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 19-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, செக்குடியரசின் லின்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் லின்டா நோஸ்கோவா முதல் செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்த போது ஸ்விட்டோலினா காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் லின்டோ நோஸ்கோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர், கால் இறுதிசுற்றுக்குள் நுழைந்தார். 12-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கின்வென் ஜெங் 6-0. 6-3 என்ற நேர் செட் கணக்கில் 95-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் ஓசியன் டோடினை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

ரோகன்-எப்டன் ஜோடி: ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 3-வது சுற்றில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், குரோஷியாவின் நிக்கோலா மேக்டிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 7-6 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிசுற்றுக்கு முன்னேறியது. ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி தங்களது கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ், ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியை எதிர்கொள்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *