ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டும். இந்த சூழலில் இங்கிலாந்து அணி, இந்தியாவில் விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக, இங்கிலாந்து அணி தாக்குதல் பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகிக் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | இந்து மதத்தை பின்பற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்..!

ஆனால், இந்தியாவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியின் இந்த அணுகு முறை கைகொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இரு அணிகளின் முன்னாள் வீரர்களும் தங்களால் முடிந்தவரை இந்தத் தொடருக்கு சுவாரசியத்தை தங்கள் கருத்துகளால் ஏற்றி வருகிறார்கள். வழக்கம்போல் இந்திய தரப்பிலிருந்து கருத்துக்கள் மென்மையாக வந்து கொண்டிருக்க, அதே வழக்கம் போல் இங்கிலாந்து தரப்பில் இருந்து அதிரடியான கருத்துக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

இங்கிலாந்து முன்னால் வீரர் மான்டி பனேசர் விராட் கோலியை ஜோக்கர்ஸ் என்று செய்யும்படி இங்கிலாந்து அணிக்கு அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் கெவின் பீட்டர்சன் ஜடேஜாவை பெரிய பந்துவீச்சாளர் இல்லை என்கின்ற அளவுக்கு பேசுகிறார். இப்படி தொடரை சுற்றி களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கெவின் பீட்டர்சன் பேசும் பொழுது “ஜடேஜாவை நான் நிறைய எதிர்கொண்டு விளையாடியிருக்கிறேன். இது டெக்னிக் பற்றியது. ஜடேஜா ஒரு முரளிதரன் இல்லை ஒரு வார்னே கிடையாது. அவர் ஒரே முறையில் பந்து வீசக் கூடியவர். அதில் திடீரென ஸ்லைட் செய்வார்.

உங்களுடைய கால்கள் வலிமையாக நீங்கள் சரியாக நின்றால், பந்து ஸ்கிட் ஆகி வரும் பொழுது, பந்துக்கு கீழே சென்று, பந்து வருகின்ற லைனுக்கு விளையாட வேண்டும். இப்படி செய்வதின் மூலமாக எல்பிடபிள்யு மற்றும் போல்ட் ஆவதில் இருந்து நாம் தப்பிப்பது உறுதி செய்து கொள்கிறோம். ஸ்லிப்பில் எட்ஜ் எடுப்பது குறித்து எந்த கவலையும் கிடையாது. நீங்கள் எல்பிடபிள்யு மற்றும் போல்ட் ஆவதுதான் பிரச்சனை. நீங்கள் பந்தின் லைன் மற்றும் லென்த்தை பார்த்து அதற்கேற்ற விளையாடுவதற்கு உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். மேலும் நான் இந்தியாவில் விளையாடும் பொழுது அஸ்வின் பந்துவீச்சை எப்படி, எத்தனை முறை அடித்திருக்கிறேன் என்று பாருங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் படிக்க | அஸ்வின் பந்தை போட்டுத் தாக்குவது எப்படி…? இங்கிலாந்துக்கு பீட்டர்சனின் அறிவுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *