லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டி20 ஃபார்மெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக பேட் செய்து வந்தனர் பாபர் அஸம் மற்றும் மொகமது ரிஸ்வான். நியூஸிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இணை இப்போது மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து அணி நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா.

“பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க கூட்டணியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். புதியவர்களை அணிக்குள் கொண்டு வருவதில் தவறில்லை. லீக் கிரிக்கெட்டில் அந்த வீரர் சிறப்பாக செயல்படலாம். சர்வதேச கிரிக்கெட் என்பது முற்றிலும் வேறு. பெரிய அளவில் நெருக்கடி மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். உலக அளவில் பிரசித்தி பெற்ற பாபர் மற்றும் ரிஸ்வான் இணையை தான் நீங்கள் பிரித்து உள்ளீர்கள்.

ஒரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை ஃபார்ம் செய்ய நேரம் எடுக்கும். அது நினைத்த நேரத்தில் மாற்றும் வகையிலான எளிய முடிவாக இருக்காது. அதற்கு அதிக பயிற்சி வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் இணையரை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன. அதன் மூலம் உங்களுக்கு என்ன ஆதாயம்” என அவர் கேட்டுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை அமைக்கப்பட்ட சிறந்த கூட்டணியில் பாபர் மற்றும் ரிஸ்வான் அங்கம் வகித்து வருகின்றனர். கடந்த 2022-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இருவரும் இணைந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நாங்கள் போட்டிகள் நடந்துள்ளன. இந்த போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வழிநடத்தி வருகிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *