இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான விக்கெட் வீழ்த்தும் திறன் மூலம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.  ஆனால், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிகமாக அஸ்வின் விளையாடியது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார்.  சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் கடைசியில் தான் இந்திய அணியில் இணைந்தார்.  ODI மற்றும் T20 களில் அஸ்வினின் சிறந்த பவுலிங் இருந்தபோதிலும், அவர் பல உலகக் கோப்பைகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், அஸ்வினின் ஒயிட்-பால் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கேட்கப்பட்டபோது, ​​மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற தகுதியற்றவர் என்று கூறி உள்ளார்.

மேலும் படிக்க | டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்…? இந்திய வீரர்கள்தான் டாப்…!

சமீபத்தில் யுவராஜ் கொடுத்த ஒரு நேர்காணலில், அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை யுவராஜ் சுட்டிக்காட்டினார், ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் சரியான வீரராக என்று சொல்ல முடியவில்லை. அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், ஆனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று யுவராஜ் கூறியுள்ளார்.  “அஷ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், ஆனால் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பெறத் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் பந்துவீச்சில் மிகவும் திறமையானவர், ஆனால் அவர் பேட்டிங்கில் என்ன செய்துள்ளார்? அல்லது ஒரு பீல்டராக என்ன செய்துள்ளார்? டெஸ்ட் அணியில் அவர் இருக்க வேண்டும், ஆனால் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாட அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை,” என்று யுவராஜ் கூறினார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், யுவராஜ் பற்றி அஸ்வின் முன்னர் பேசி இருந்த ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டு ஆகி வருகிறது.  இந்திய கிரிக்கெட்டுக்கு யுவராஜின் பங்களிப்புகள் குறித்தும், குறிப்பாக அவர் சந்தித்த உடல்நலக் குறைவைக் கருத்தில் கொண்டு, அஷ்வின் பேசியுள்ளார்.  அஸ்வின் தனது யூடியூப் சேனலின் வீடியோ ஒன்றில், யுவராஜ்க்கு புற்றுநோய் இருப்பதை அறிந்ததும் தான் எவ்வளவு அதிர்ச்சியடைந்தேன் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.  “யுவிக்கு இருமல் இருந்தது, அவர் கடுமையாக இருமுவார். இது விளையாட்டின் அழுத்தம் என்று நான் நினைத்தேன், ஆனால் இருமல் அதிகமாக இருந்தது. உண்மையில், யாருக்கும் எந்த யோசனையும் இல்லை.

யுவராஜுக்கு புற்றுநோய் இருப்பது பற்றிய செய்தி வெளியானபோது, ​​நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால், ‘பாரத் கா ஐகான்’ என்று நான் சொல்வதைப் போல, தொடரின் சிறந்த வீரராக மாறிய ஒருவரை இப்படி நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அதுதான். யுவராஜ் சிங்கின் உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் நம்பமுடியாத அளவிற்கு பெரிய பங்கு வகித்தார் என்று நான் நினைக்கிறேன். நான் அதை யுவராஜ் சிங்கின் உலகக் கோப்பை என்று அழைக்கிறேன், ஏனென்றால் அவர் அந்த சூழ்நிலையில் முக்கிய வீரராக இருந்தார், ”  என்று அஸ்வின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | MS Dhoni: SA20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *