ராஞ்சி: ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (13-ம் தேதி) அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி நியூஸிலாந்துடனும், 16-ம் தேதி இத்தாலியுடனும் இந்திய அணி மோதுகிறது.

அரை இறுதிப் போட்டிகள் 18-ம் தேதியும், இறுதிப் போட்டி 19-ம்தேதியும் நடைபெறுகிறன்றன. இந்ததொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா அணிகள் இதுவரை 15 முறை நேருக்கு நேர்மோதி உள்ளன. இதில் அமெரிக்கா 9 ஆட்டங்களிலும், இந்தியா 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது. இந்திய அணியில் 300 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்ட சீனியர் ஸ்டிரைக்கரான வந்தனா கட்டாரியா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதுபின்னடைவாக கருதப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பெனால்டி கார்னர்வாய்ப்பு களை கோல்களாகமாற்றுவதில் சமீபகாலமாகஇந்திய மகளிர் அணியினர்தடுமாறி வருகின்றனர் இதில் முன்னேற்றம் காணும் விதமாக ரூபிந்தர்பால் சிங், இந்தியவீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார். இதனால்இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி – சிலி, ஜப்பான் – செக்குடியரசு, நியூஸிலாந்து – இத்தாலி மோதுகின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *