ஜாக்ரெப்: குரோஷியா நாட்டின் தலைநகரான ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. தரவரிசை தொடரான இதில் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் வான்ஹாவோ சூ உடன் மோதினார். இதில் அமன் ஷெராவத் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள அமன் ஷெராவத் 15-4 என்ற கணக்கில் துருக்கியின் முகமது கரவுஸையும், கால் இறுதி சுற்றில் 11-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸ் ஜேன் ரே ரோட்ஸையும், அரை இறுதியில் 11-0 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் ராபர்டி திங்காஷ்விலியையும் தோற்கடித்தார்.

86 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசாமத் தவுலத்பெகோவிடம் தோல்வி அடைந்தார். எனினும் அசாமத் இறுதி சுற்றுக்கு முன்னேறியதால் தீபக் பூனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை அவர், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *